/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மஹாராஷ்டிராவின் சித்தார் தம்புராவுக்கு புவிசார் குறியீடு
/
மஹாராஷ்டிராவின் சித்தார் தம்புராவுக்கு புவிசார் குறியீடு
மஹாராஷ்டிராவின் சித்தார் தம்புராவுக்கு புவிசார் குறியீடு
மஹாராஷ்டிராவின் சித்தார் தம்புராவுக்கு புவிசார் குறியீடு
ADDED : ஏப் 08, 2024 03:03 AM

புனே:நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தயாரிக்கப்படும் அல்லது கிடைக்கும் பாரம்பரிய பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
மஹாராஷ்டிராவின் மீரஜ் நகரில், தலைமுறை தலைமுறையாக தயாரிக்கப்பட்டு வரும் இசைக்கருவிகளான சித்தார் மற்றும் தம்புராவுக்கு இந்த புவிசார் குறியீடு சான்று கிடைத்துள்ளது.
சித்தாருக்கான சான்று, மீரஜின் இசைக்கருவிகள் தயாரிப்பு குழுமத்துக்கும்; தம்புராவுக்கான சான்று, சோல்டோன் இசைக்கருவி தயாரிப்பு நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு அதிகளவில் சித்தார் மற்றும் தம்புராக்களை தயாரித்து விற்பனை செய்து வரும் மீரஜ் இசைக்கருவிகள் தயாரிப்பு குழுமத்தின் தலைவர் மோசின் மிராஜ்தார் இது குறித்து கூறியதாவது:
கடந்த 300 ஆண்டுகளாக, ஏழு தலைமுறைகளாக இங்குள்ள குடும்பங்கள் சித்தார் மற்றும் தம்புரா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உள்நாட்டில் கிடைக்கும் குறைந்த வளங்களை வைத்து தயாரிக்கப்படும் சித்தார் மற்றும் தம்புராக்களுக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் இந்த குறியீடு பெறும் பொருட்கள், சர்வதேச அளவில் புகழ் பெறுவதுடன், தனித்துவம் வாய்ந்ததாகவும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

