/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பாக்.,கில் இருந்து திரும்பிய பெண் 8ம் வகுப்பில் தேர்ச்சி
/
பாக்.,கில் இருந்து திரும்பிய பெண் 8ம் வகுப்பில் தேர்ச்சி
பாக்.,கில் இருந்து திரும்பிய பெண் 8ம் வகுப்பில் தேர்ச்சி
பாக்.,கில் இருந்து திரும்பிய பெண் 8ம் வகுப்பில் தேர்ச்சி
ADDED : ஜூலை 25, 2024 01:28 AM

இந்துார், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கீதா என்ற பெண், எட்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கீதா, 33, சிறு வயதில் தவறுதலாக ரயிலில் ஏறி பாகிஸ்தான் சென்றார். அவரை, 'எதி' அறக்கட்டளை தத்தெடுத்தது.
கராச்சியில் தங்கியிருந்த அவர், அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்ட முயற்சியால், 23 ஆண்டுகளுக்கு பின், 2015 அக்., 26ல் இந்தியாவுக்கு திரும்பினார்.
மத்திய பிரதேசத்தில் இந்துாரில் உள்ள காப்பகத்தில் வசித்தார். 2021ல், தன் குடும்ப உறுப்பினர்களை, கீதா கண்டுபிடித்தார்.
தற்போது அவர், மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், தன் தாய் மீனா பண்டரேவுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ம.பி., மாநில திறந்தநிலை பள்ளிக்கல்வி வாரியம் நடத்திய எட்டாம் வகுப்பு தேர்வில், 600 மதிப்பெண்ணுக்கு, 411 மதிப்பெண் எடுத்து, முதல் வகுப்பில் கீதா தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய மற்றும் மாநில அரசுகளின் நான்காம் வகுப்பு பணியாளர்களை பணியமர்த்துவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சியாகும்.
'இதன்படி, அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க கீதா முடிவு செய்துள்ளார். மேலும், மேற்படிப்பை தொடரவும் அவர் ஆர்வமாக உள்ளார்' என்றனர்.