/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
போர்ச்சுக்கல் பெண்ணை மணம் முடித்த காரைக்குடி இளைஞர்; யோகாவில் மலர்ந்த காதல்

ADDED : மார் 11, 2025 12:22 AM

காரைக்குடி : காரைக்குடியைச் சேர்ந்த அன்னபாண்டியன் -- மெய்யாத்தாள் தம்பதி மகன் சுப்பு. இவர் அயர்லாந்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அங்கு யோகா வகுப்பிற்கு சென்றபோது, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த செவிலியரான, மரிசா லாப்ஸ் என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் மூன்றரை ஆண்டாக காதலித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த மரிசா லாப்சுக்கு தமிழ் கலாசாரம் பிடித்து விட, தனக்கும் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று காரைக்குடியில் ஹிந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்தது.
மரிசா லாப்ஸ் கூறுகையில்: தமிழகம் வந்த போது பாரம்பரிய உடைகள், கலாசாரம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்கள் சேலை அணிவது மிகவும் பிடித்திருந்தது. ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.