/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கதை கேளு... கதை கேளு... செயலி சொல்லும் கதை கேளு!
/
கதை கேளு... கதை கேளு... செயலி சொல்லும் கதை கேளு!
UPDATED : ஏப் 28, 2024 02:36 AM
ADDED : ஏப் 28, 2024 01:54 AM

தாத்தா, பாட்டி இல்லாத வீடுகளில், குழந்தைகளால் கதைகளை கேட்கவோ, கற்பனையாக புனைந்து கேள்வி கேட்கவோ வாய்ப்புகள் குறைவுதான். அந்த குறையை நிவர்த்தி செய்ய, எக்கச்சக்க செயலிகள் வந்துவிட்டன.
குழந்தைகளுக்கு இதிகாச, புராண கதைகள் சொல்வதற்கு, அவர்களின் கற்பனை சிறகுகளை விரித்து பறக்க வைப்பதற்கு, பெற்றோர் நிறைய மெனக்கெட வேண்டும். புத்தகங்கள் படிக்க வேண்டும்.
அதற்கெல்லாம் நேரமேது என அங்கலாய்த்து கொண்டு, மொபைல் போன்களை கையில் கொடுத்தால், குழந்தைகளின் தேடலை விரிவாக்க முடியாது.
இதற்காக, புத்தகங்களை படித்து தான், குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டுமென்பதில்லை. குழந்தைகளுக்கான கதைகள், நாவல்களை, ஆடியோ வடிவில் வழங்க, நிறைய செயலிகள் வந்துவிட்டன. சரி...செயலிகளை வைத்து, குழந்தைகளின் புத்தக வாசிப்பு வழக்கத்தை துாண்டுவது எப்படி?
n செயலிகளை, வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் ஒலிக்க விடலாம். உங்களின் ஓய்வு நேரம், பயணங்களின் போது, இக்கதைகளை கேட்கலாம்.
n வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியதும், குறிப்பிட்ட நேரத்தை கதை சொல்ல ஒதுக்கி, குழந்தைகளுக்கு எடுத்துரைக்கலாம்.
n தினமும் புதுப்புது கதைகளுடன் வீட்டிற்கு சென்றால், உங்களின் வருகைக்கும், கதைக்கான நேரத்திற்காகவும், குழந்தைகள் காத்திருக்கும்.
n படிப்படியாக, பேன்டசி கதைகளை தாண்டி, வரலாற்று சம்பவங்கள், அறிவியல் புனைவுகள், சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறு என, புதுப்புது விஷயங்களாக, கதைகளின் வழியாக அறிமுகப்படுத்தலாம்.
n கதை கேட்டு பழகிய குழந்தைகள், வாசித்து அதன் அனுபவத்தை பெற, ஆர்வமாக முயற்சி செய்வர்.
n புத்தகத்தை வழங்கி வாசிக்க பழக்குவதற்கு பதிலாக, கதை சொல்லி, புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தினால், அவர்களின் கற்றல் விரிவடையும்.
இனி கதை கேட்க துவங்கலாமே!

