/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்
/
மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்
ADDED : மே 23, 2024 11:54 PM

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி 35; ஆப்பிள், தர்பூசணி, இலை உள்ளிட்டவைகளில் பிரபலங்களின் உருவப் படத்தை வரைவார். அதேபோன்று பென்சில் போன்ற நுணுக்கமான பொருட்களிலும் உருவப் படங்களை வரைவார். நேற்று முன்தினம் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கார்த்தி, மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து அதனை மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுக்கு வழங்கினார்.
அவர் கூறுகையில் ''ஓவியத்தை வித்யாசமான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல பழங்கள் மற்றும் இலைகள்,பென்சில் ஆகியவற்றில் உருவம் வரைவேன். மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து பக்தர்களுக்கு வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது'' என்றார்.