/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
2050க்குள் நிலவில் 'சிட்டி' அமைக்க நாசா திட்டம்: ஆய்வு மாணவர் தகவல்
/
2050க்குள் நிலவில் 'சிட்டி' அமைக்க நாசா திட்டம்: ஆய்வு மாணவர் தகவல்
2050க்குள் நிலவில் 'சிட்டி' அமைக்க நாசா திட்டம்: ஆய்வு மாணவர் தகவல்
2050க்குள் நிலவில் 'சிட்டி' அமைக்க நாசா திட்டம்: ஆய்வு மாணவர் தகவல்
UPDATED : ஜூன் 29, 2024 04:55 PM
ADDED : ஜூன் 28, 2024 11:51 PM

ராமநாதபுரம்: ''2050 ம் ஆண்டுக்குள் நிலவில் சிட்டியை உருவாக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது,'' என, அம்மைய பல்கலையில் படிக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆய்வு மாணவர் சிவபெருமான் 26, பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நரசிங்ககூட்டத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் சிவபெருமான் அரசு பள்ளியில் படித்து விடாமுயற்சியால் தற்போது அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரிசோனா பல்கலையில் விண்வெளி ஆய்வுத்துறையில் பி.எச்டி., படித்து வருகிறார்.
நிலவில் சிட்டி அமைக்கும் நாசா திட்டத்தில் சிவபெருமானும் ஆய்வு மாணவராக உள்ளார். விடுமுறையில் தற்போது ராமநாதபுரம் வந்துள்ள அவர் நேற்று ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: துவக்கத்தில் சுமாராக படித்த நான் பிறகு நன்றாகப் படித்து பத்தாம் வகுப்பில் 500க்கு 433 மதிபெண்கள் பெற்றேன். பிளஸ் 2 கணிதத்தில் 200க்கு 199 மதிப்பெண் பெற்று அப்போதைய ராமநாதபுரம் கலெக்டர் நந்தக்குமார் உதவியால் உயர்கல்வி படித்து ஆராய்ச்சி மாணவராக நிற்கிறேன்.
சந்திராயன் ஆய்வில் நிலாவில் சிறிது தண்ணீர் உள்ளது என 2008ல் கண்டறிப்பட்டது. அங்குள்ள மண்ணை துாய்மைப்படுத்தி செடியும் வளர்க்க முடியும். அதற்கான ஆய்வு நடக்கிறது. தற்போது ரோபாட் உதவியுடன் நிலவில் ஒரு சிட்டியை உருவாக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. 2040 முதல் 2050க்குள் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
விண் கற்களால் பூமிக்கு ஆபத்து உள்ளது. அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விண் கற்களின் மண்ணை எடுத்து ஆராய்ச்சி நடக்கிறது என்றார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதிலளித்தார்.
வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், தலைமையாசிரியர் எஸ்தர்வேணி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.