/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆமூர் கண்மாய்
/
ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆமூர் கண்மாய்
UPDATED : மே 18, 2024 03:32 PM
ADDED : மே 18, 2024 05:03 AM

ஒத்தக்கடை : 'மதுரை திருமோகூர், திருவாதவூர் ரோட்டில் உள்ள ஆமூர் கண்மாய் ஆயிரம் வருடங்களை கடந்து தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது' என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தொல்லியல், சிற்பத்துறை ஆய்வாளர்கள் தேவி, அறிவு செல்வம் கூறியதாவது:
கல்வெட்டுகளில் கி.பி. 9 ஆம் நுாற்றாண்டில் நல்லணி ஆமூர் என பெயர் கொண்டு வணிக நகரமாக இருந்துள்ளது.இப்பகுதியை கி.பி. 12 ஆம் நுாற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த முதலாம் சடையவர்ம குலசேகர பாண்டியன் காலத்தில் திசையாயிரத்து ஐஞ்நுாற்றுவர் என்ற வணிகக் குழுவினர் இங்கு சிவன் கோயில் ஒன்றினை கட்டிள்ளனர்.
பிற்காலத்தில் இக் கோயிலானது சிதைந்ததால் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தியது.இதே ஊரில் கி.பி. 13ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், நந்தி, முருகன் போன்ற சிற்பங்களும் சிதைந்த நிலையிலான கோயில் கற்களும் உள்ளன.இந்த ஊரில் உள்ள ஆமூர் கண்மாயின் மடை துாணில் இருந்த பத்து வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு செய்தியானது.
கி.பி. 9 நுாற்றாண்டில் பாண்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கலிதீரனின் தந்தை சாத்தன் என்பவர் இம்மடையை செய்வித்ததை இக்கல்வெட்டு வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று வரை இப்பகுதி மக்கள் இந்த கண்மாயில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்கின்றனர். இதனருகே இடையப்பட்டி கடம்பவனக் காடு உள்ளது என்றனர்.

