/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மொபைல் போனுக்கான கையடக்க சோலார் சார்ஜர்
/
மொபைல் போனுக்கான கையடக்க சோலார் சார்ஜர்
UPDATED : மே 19, 2024 11:58 AM
ADDED : மே 19, 2024 02:09 AM

திருச்சி: திருச்சி, என்.ஐ.டி.,யின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் நாகமணி மேற்பார்வையில், முனைவர் பட்டம் பெற்ற சி.டி.ஏ.சி.,யின் மூத்த இயக்குனர் சந்திரசேகர், கையடக்க சோலார் மொபைல் போன் சார்ஜர் கருவியை கண்டுபிடித்து உள்ளார்.
இவர், தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சோலார் பேனல், மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான அல்ட்ரா கெப்பாசிட்டர் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார். இதற்காக மூன்று காப்புரிமை மற்றும் மூன்று பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது.
'பொதுமக்களின் அன்றாட தேவைகளை இலக்காக கொண்டு, ஆற்றல் குறைக்கடத்தி சாதனங்களின் மேம்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, இந்த சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சந்தை விலையை விட 50 சதவீதம் குறைவாக கிடைக்கும்' என, சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதை அவர், என்.ஐ.டி., இயக்குனர் அகிலாவிடம் ஒப்படைத்தார்.

