/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணி; உதவிய பெண் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
/
பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணி; உதவிய பெண் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணி; உதவிய பெண் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணி; உதவிய பெண் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
UPDATED : ஆக 30, 2024 10:49 AM
ADDED : ஆக 30, 2024 06:54 AM

கோவை: பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணியை பாதுகாப்பாக மருத்துவமனை வார்டில் சேர்த்த பெண் டாக்சி டிரைவரை அனைவரும் பாராட்டினர்.
கோவையை சேர்ந்த, 28 வயது கர்ப்பிணி அரசு பஸ்சில் தனியாக பயணம் செய்து கொண்டு இருந்தார். பஸ் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் கண்டக்டரிடம் தெரிவித்தனர். கண்டக்டர், டிரைவரிடம் கூறி பஸ்சை அரசு மருத்துவமனைக்கு இயக்கினார்.
மருத்துவமனை நுழைவாயில் முன் பஸ் நின்றதும் அரசு மருத்துவமனை டீனின் டிரைவர் சிவக்குமார் அங்கு ஓடி வந்தார். கர்ப்பிணியை மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல உதவி கேட்டார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பெண் டாக்சி டிரைவர் ஒருவர் தாமாக முன் வந்து தனது காரில் கர்ப்பிணியை ஏற்றி கொண்டு பிரசவ வார்டில் சேர்த்தார். அவரை அனைவரும் பாராட்டினர்.
இதுகுறித்து பெண் டாக்ஸி டிரைவர் ரமாதேவி கூறியதாவது:
நான் தேனியில் இருந்து கோவை வந்து கார் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். அரசு மருத்துவமனை முன் வாடிக்கையாளரை இறக்கி விட்டு நின்றிருந்தேன்.
அப்போது அரசு பஸ் வேகமாக வந்து மருத்துவமனை முன் நின்றதை பார்த்தேன். உள்ளே பிரசவ வலியால் பெண் துடித்து கொண்டு இருந்தார்.
அவரை காரில் அழைத்து சென்று பிரசவ வார்டில் அனுமதித்தேன். அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தேன். குழந்தை பிறந்ததும் அவர்கள் எனக்கு மொபைல் போனில் அழைத்து தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மகிழ்ச்சியாக இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

