/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கடலுக்குள் 40 அடி ஆழத்தில் தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
/
கடலுக்குள் 40 அடி ஆழத்தில் தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
கடலுக்குள் 40 அடி ஆழத்தில் தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
கடலுக்குள் 40 அடி ஆழத்தில் தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
ADDED : ஆக 16, 2024 03:30 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கடலில், 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டு, ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் மரியாதை செலுத்தினர். சுதந்திர தினம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, நேற்று சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ தலைமையில் 10 ஸ்கூபா டைவிங் வீரர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.
இவர்கள் தமிழக மீன்வளத்துறையினருடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ.,ல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்க விட்டனர். கடலுக்குள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
பயிற்சியாளர் சில ஆண்டுகளாக கடல் பாதுகாப்பு, கடலில் பிளாஸ்டிக் கலப்பதை தடுப்பதற்காக, இதுபோன்ற பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் செய்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.