/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஊரெல்லாம் வெள்ளம் படகில் வந்த மாப்பிள்ளை
/
ஊரெல்லாம் வெள்ளம் படகில் வந்த மாப்பிள்ளை
ADDED : ஜூலை 10, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா :பீஹாரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுபானி மாவட்டத்தில் கோசி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த முகமது ஈஷான் என்ற இளைஞருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெள்ளத்தால் மணப்பெண்ணின் ஊருக்கு வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை மாப்பிள்ளையாக அலங்கரித்து, படகில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதன்பின் திருமணம் நடந்தது.