/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
யானைகளை விரட்ட ஏ.ஐ., தொழில்நுட்பம்: கோவை அருகே கிராமத்தில் அசத்தல்
/
யானைகளை விரட்ட ஏ.ஐ., தொழில்நுட்பம்: கோவை அருகே கிராமத்தில் அசத்தல்
யானைகளை விரட்ட ஏ.ஐ., தொழில்நுட்பம்: கோவை அருகே கிராமத்தில் அசத்தல்
யானைகளை விரட்ட ஏ.ஐ., தொழில்நுட்பம்: கோவை அருகே கிராமத்தில் அசத்தல்
UPDATED : ஆக 21, 2024 01:14 PM
ADDED : ஆக 21, 2024 01:23 AM

மேட்டுப்பாளையம்,:கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் கெம்மாரம்பாளையம் ஊராட்சி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, கெம்மாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சோதனை முறையில், நவீன தொழில்நுட்பமான, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, இரும்பு கம்பத்தில், கண்காணிப்பு கேமராவும், ஒலிபெருக்கியும் பொருத்தியுள்ளனர்.
கேமரா கம்பத்தில் இருந்து, 50மீ., சுற்றளவில் எந்த வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தாலும், கேமராவில் பதிவாகும். கேமரா பதிவு, கம்ப்யூட்டர் மானிட்டருக்கு செல்லும்.
அங்கிருந்து ஒலிபெருக்கியில், மனிதர்கள் விலங்குகளை விரட்டுவதை போல சத்தம் ஒலிபரப்பாகும். அதனால் அந்த சத்தத்தை கேட்டு, வனவிலங்குகள் பயந்து, விவசாய நிலங்களுக்கு வராமல், வனப்பகுதிக்குள் செல்லும்.
கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா கூறியதாவது:
வனவிலங்குகள் தாக்குதலால், வாழை போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்து வந்தன.
இதை தடுக்க, ஊராட்சியின் சார்பில் இருளர்பதி பழங்குடி கிராமம் அருகே, பட்டா நிலமும், வனப்பகுதியும் முடியும் பகுதியில், ஏ.ஐ., தொழில்நுட்ப முறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கியில் தொடர்ந்து சப்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விடுகின்றன. இதனால் பயிர்களை பாதுகாப்பதோடு, மனித உயிர்சேதமும் தடுக்கப்பட்டது. இதற்கு, 70,000 ரூபாய் செலவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.