/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
நாட்டின் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,790 கோடி!
/
நாட்டின் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,790 கோடி!
நாட்டின் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,790 கோடி!
நாட்டின் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,790 கோடி!
ADDED : ஏப் 23, 2024 11:16 PM

அமராவதி, ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சந்திரசேகர், தன் குடும்ப சொத்து மதிப்பு 5,790 கோடி ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக நாட்டின் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில், 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.
ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக மே 13ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்., 18ல் துவங்கியது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தொழிலதிபர் சந்திரசேகர், நேற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
குண்டூர் மாவட்டம், தெனாலி அருகே உள்ள புரி பாலம் பகுதியைச் சேர்ந்த இவர் விஜயவாடாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பும், அமெரிக்காவில் எம்.டி., படிப்பையும் முடித்து அங்கேயே பணியாற்றினார். பின் 'யுவேர்ல்ட்' எனும் ஆன்லைன் கல்வி நிறுவனத்தை துவங்கி தொழிலதிபர் ஆனார்.
அரசியலில் ஆர்வம் உடைய இவர் தெலுங்கு தேசம் கட்சியின் என்.ஆர்.ஐ., அணி செயலராக உள்ளார். அவருக்கு இம்முறை குண்டூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் தன் வேட்புமனுவில், தன் பெயரில் 2,448 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், மனைவி ஸ்ரீரத்னா கோனேரு பெயரில் 2,343 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், பிள்ளைகள் பெயரில் 1,000 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க வங்கியில் 1,138 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன் வாயிலாக தற்போதைய வேட்பாளர்களில் மிக அதிக சொத்து மதிப்பு உடையவராக சந்திரசேகர் அறியப்படுகிறார்.

