/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக 100 இலவச 'ஹெல்மெட்'
/
விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக 100 இலவச 'ஹெல்மெட்'
விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக 100 இலவச 'ஹெல்மெட்'
விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக 100 இலவச 'ஹெல்மெட்'
ADDED : ஜூலை 22, 2025 12:35 AM

திருவெறும்பூர்; 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதால், விபத்தில் உயிரிழந்தவரின் நினைவாக, ஐந்தாம் ஆண்டாக, பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி, அவரது நண்பர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சுரேந்தர் மணி, 20. இவர், சாலை விபத்தில், ஹெல்மெட் அணியாமல் பய ணித்து, தலையில் காயமடைந்து இறந்து விட்டார்.
இதை உணர்ந்த அவரது நண்பர்கள், 'டூ - வீலர் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுரேந்தர் மணியின் ஒவ்வொரு நினைவு நாளிலும், பொதுமக்களுக்கு இலவசமாக, 100 ஹெல்மெட் வழங்கி வருகின்றனர்.
அவரது நினைவு நாளான நேற்று முன்தினம், திருவெறும்பூர் கடைவீதியில், ஹெல்மெட் அணியாமல் வந்த 100 வாகன ஓட்டிகளுக்கு, ஏ.எஸ்.பி., அரவிந்த் பனாவத் இலவசமாக ஹெல்மெட் வழங்கி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இலவச ஹெல் மெட் வழங்கியவர் க ளை பலரும் பாராட்டினர்.