/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
100 மூட்டை அரிசியில் சாதம், கறி விருந்து: ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா

ADDED : மார் 20, 2024 12:34 AM

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவிற்காக கிராம மக்களால் ஆடுகள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும்.
அவை பலியிடப்பட்டு அசைவ விருந்து படைக்கப்படும். இந்தாண்டிற்கான கறி திருவிழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பொங்கல் வைக்க வழிபாடு துவங்கியது.
பின் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 40 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூட்டை அரிசியில் சாதம் வைத்து கறி விருந்து நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அசைவ உணவை வாங்கி சென்றனர்.