sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

ஆடம்பர வாழ்க்கைக்கு 'குட்பை' துறவறத்தில் 26 வயது பெண்

/

ஆடம்பர வாழ்க்கைக்கு 'குட்பை' துறவறத்தில் 26 வயது பெண்

ஆடம்பர வாழ்க்கைக்கு 'குட்பை' துறவறத்தில் 26 வயது பெண்

ஆடம்பர வாழ்க்கைக்கு 'குட்பை' துறவறத்தில் 26 வயது பெண்

2


UPDATED : ஏப் 07, 2025 08:08 AM

ADDED : ஏப் 07, 2025 08:03 AM

Google News

UPDATED : ஏப் 07, 2025 08:08 AM ADDED : ஏப் 07, 2025 08:03 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாத்கிர்: ஆடம்பர வாழ்க்கையை உதறிவிட்டு 26 வயது இளம்பெண் துறவறம் மேற்கொள்ள உள்ளார்.

யாத்கிர் டவுன் ஜெயின் பிளாக்கில் வசிப்பவர் நரேந்திர காந்தி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மூத்த மகள் நிகிதா, 26. ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிகிதாவுக்கு, துறவறம் மேற்கொள்ள ஏழு ஆண்டுக்கு முன்பு ஆசை வந்தது. தனது பெற்றோரிடம் கூறினார்.

அவர்கள் துறவறம் அனுப்ப மறுத்து விட்டனர். ஏழு ஆண்டுகளாக பெற்றோரிடம் பேசி, ஒரு வழியாக துறவறம் செல்ல தற்போது நிகிதா அனுமதி வாங்கி உள்ளார்.

இதையடுத்து நேற்று காலையில், நகரின் முக்கிய வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் நிகிதா ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். விலை உயர்ந்த உடைகள், நகைகளை அணிந்து இருந்தார்.

துறவறம் மேற்கொள்வது பற்றி நிகிதா கூறுகையில், ''துறவறம் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். ஆடம்பர வாழ்க்கையை விடுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பகவான் மகாவீர் சொன்னது போன்று, என் ஆன்மா பரம ஆத்மாவாக மாற விரும்புகிறது. இதனால் இந்த பாதையை தேர்ந்து எடுத்து உள்ளேன். எனது குடும்பத்தினர், நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றி,'' என்றார்.

துறவறம் செல்பவர்கள் காலணிகள் அணிய கூடாது; வாகனங்களில் செல்ல கூடாது; ஒரே இடத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்க கூடாது; வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. துறவறம் சென்ற பின் மொட்டை அடிக்கப்படும். கத்தியை பயன்படுத்தாமல் கையால் தலைமுடியை பிடுங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us