500 கி.மீ., சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்
500 கி.மீ., சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்
ADDED : ஆக 23, 2026 03:12 AM

- நமது நிருபர் -: மொபைல் போனில் மூலம் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 73 வயது முதியவர், 500 கி.மீ., பயணித்துள்ளார்.
பாகல்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பூஜாரி, 73. இவரை, 'சைக்கிள் பீஷ்மர்' என்றும் அழைக்கின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் குத்ரோலி ஸ்ரீ கோகர்ணநாத் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் பாகல்கோட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெலகாவி மாவட்டம் சங்கேஷ்வர் வழியாக பாகல்கோட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரமேஷ் பூஜாரி கூறியதாவது:
குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை வெளியே ஓடி விளையாட வையுங்கள்.
அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, சைக்கிளில் பயணிப்பது சிறந்தது என்பதை உணர்த்த இந்த பயணத்தை துவக்கினேன்.
இதற்கு முன்னரும் கூட, நடிகர் புனித்ராஜ்குமார், 2021ல் இறந்தபோது, சங்கேஷ்வரில் இருந்து வெயில், மழை பாராமல் எட்டு நாள் பயணித்து, பெங்களூரு சென்றடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
