தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஐராவதீஸ்வரர் கோவிலில் 'போட்டோ ஷூட்' சர்ச்சை

ஐராவதீஸ்வரர் கோவிலில் 'போட்டோ ஷூட்' சர்ச்சை

ஐராவதீஸ்வரர் கோவிலில் 'போட்டோ ஷூட்' சர்ச்சை

2


UPDATED : ஆக 13, 2026 06:10 AM

ADDED : ஆக 12, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 06:10 AM ADDED : ஆக 12, 2026 07:12 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் : தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், அனுமதியின்றி போட்டோ ஷூட் நடத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரத்தில், இரண்டாம் ராஜராஜசோழனால், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இக்கோவில், இந்திய தொல்லியல் துறை பாராமரிப்பில் உள்ளது.

சமீபத்தில், அனுமதியின்றி சிலர் இங்கு போட்டோ ஷூட் நடத்திய விவகாரம் குறித்து, அகில பாரத ஹிந்து மகா சபா தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ராம நிரஞ்சன் அளித்த புகாரில், அறநிலையத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொல்லியல் துறையினர் கூறுகையில், 'கோவிலை நாங்கள் கண்காணித்தாலும், அனுமதியின்றி போட்டோ, வீடியோ எடுப்பவர்கள் குறித்து, அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் தகவல் அளித்தால், நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். அவர்கள் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us