அரசு பஸ் டிஜிட்டல் பலகையில் 'மதுரை பயலுகடா கொடூரமடா' வாசகம் ஒளிர்ந்ததால் சர்ச்சை
அரசு பஸ் டிஜிட்டல் பலகையில் 'மதுரை பயலுகடா கொடூரமடா' வாசகம் ஒளிர்ந்ததால் சர்ச்சை
UPDATED : ஆக 14, 2026 08:38 AM
ADDED : ஆக 13, 2026 11:12 PM

சென்னை: அரசு பஸ் ஒன்றின் டிஜிட்டல் பலகையில், 'மதுரை பயலுகடா கொடூரமடா' என்ற வாச கம் ஒளிர்ந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு போக்குவரத்து கழக பஸ்களில் வழித்தடம், ஊர் பெயரை காட்டும் டிஜிட்டல் பலகையை விஷமிகள் முடக்கி விடுவதால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.
குறிப்பாக, வழித்தடம் விபரங்கள் இருக்கும் டிஜிட்டல் பலகையில், அரசியல் கட்சி பெயர் இடம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் சென்னையில் மாநகர பஸ் டிஜிட்டல் பலகை யில், 'தக்காளி வெற்றிக் கழகம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இனி, இது போன்ற பிரச்னைகள் வராது என, அரசு போக்குவரத்து கழகங்கள் அறிவித்தன. ஆனாலும், இதற்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.
மதுரை மாட்டுத்தாவணி யில் இருந்து ராமநாதபுரத்துக்கு செல்லும் அரசு பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில், 'மதுரை பயலுகடா கொடூரமடா' என்ற வாசகம் ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது.
இது, பயணியரிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அரசு பஸ்களில் உள்ள டிஜிட்டல் பலகையில் தொடர்ந்து, 'ஹேக்' செய்யப் பட்டு, வேறு வாசகங்கள் இடம்பெறுவது தொடர் கதையாகி வருகிறது.
இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
