தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கையில் தேசியக்கொடியை ஏந்தி 3:29 மணி நேரம் மிதந்த மாணவி

 கையில் தேசியக்கொடியை ஏந்தி 3:29 மணி நேரம் மிதந்த மாணவி

 கையில் தேசியக்கொடியை ஏந்தி 3:29 மணி நேரம் மிதந்த மாணவி


ADDED : ஆக 15, 2026 09:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 09:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கையில் தேசியக்கொடியுடன், 3:29 மணி நேரம் மிதந்து, கல்லுாரி மாணவி நித்யபாரதி, 18, அசத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் பஞ்.,க்குட்பட்ட கே.ஏ., நகரைச் சேர்ந்தவர் ராமன், 45. ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி வள்ளியம்மாள், 38. இவர்கள் மகள் நித்யபாரதி, 18. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் ரோபோடிக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நித்யபாரதி பள்ளியில் நீச்சல் பயின்றபோது, மிதவை நீச்சலில் கின்னஸ் சாதனைபுரிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார்.

தண்ணீரில் நீண்ட நேரம் கால்களை அகற்றாமல், கையை தலையில் வைத்து படுத்த நிலையில், 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நீரில் மிதந்து சாதனை படைத்தார். இது குறித்து, 'கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டு' அமைப்பினர், 2025 நவ., 9ல், சாதனையாளர் விருது வழங்கியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி, கால்களை நீட்டி படுத்து, காலை, 8:00 மணி முதல் 11:29 மணி வரை நீரில் மிதந்து சாதனை படைத்தார்.

நித்யபாரதி கூறுகையில், ''மிதவை நீச்சலில் கின்னஸ் சாதனைபுரிவதே என் இலக்கு. இதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறேன். கடந்த முறை, 1 மணி நேரம் மட்டுமே மிதவை நீச்சலை செய்து காட்டிய நிலையில், தற்போது தேசியக்கொடியுடன், மூன்றரை மணி நேரம் மிதவை நீச்சல் செய்துள்ளேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us