/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஓட்டப்பந்தயத்தில் 4 பதக்கம் 56 வயது ஆசிரியர் அசத்தல்
/
ஓட்டப்பந்தயத்தில் 4 பதக்கம் 56 வயது ஆசிரியர் அசத்தல்
ஓட்டப்பந்தயத்தில் 4 பதக்கம் 56 வயது ஆசிரியர் அசத்தல்
ஓட்டப்பந்தயத்தில் 4 பதக்கம் 56 வயது ஆசிரியர் அசத்தல்
UPDATED : ஜன 17, 2025 04:28 PM
ADDED : ஜன 17, 2025 07:35 AM

சாதிப்பதற்கு வயது தடையாக இருப்பது இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆறு வயதிலும் சாதிப்பர். 60 வயதிலும் சாதிப்பர்.
இதற்கு உதாரணமாக 56 வயது ஆசிரியர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் நான்கு பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார்.
மங்களூரில் கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மூன்று நாட்கள் கடலோர மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் பெரும்பாலும் 40 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களே அதிகம் பங்கேற்றனர். ஆனால் 56 வயதான பாஸ்கர் நாயக் என்ற ஆசிரியரும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இவருக்கு தான் வயதாகி விட்டதே. ஓட்டப்பந்தயத்தில் எப்படி ஓடுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இளம் ஆசிரியர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பாஸ்கர் நாயக் செயல்பாடுகள் இருந்தன.
அதாவது 1,500, 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை தட்டி தூக்கினார். அவரைப் பார்த்து அனைத்து ஆசிரியர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து பாஸ்கர் நாயக் கூறியதாவது:
எனக்கு 56 வயது ஆனாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவேன். தினமும் காலை வாக்கிங், ஜாக்கிங் செய்கிறேன். ஓட்டப்பந்தய போட்டியில் இரண்டு தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
வரும் நாட்களிலும் நிறைய போட்டிகளில் கலந்து கொள்வேன். என்னால் முடியும் வரை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பேன். சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று சொல்வதை முழுமையாக நம்பும் நபர் நான்.
இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --