/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மன உறுதி படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர்: நல்ல நண்பர்களால் வெல்வது நிச்சயம்
/
மன உறுதி படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர்: நல்ல நண்பர்களால் வெல்வது நிச்சயம்
மன உறுதி படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர்: நல்ல நண்பர்களால் வெல்வது நிச்சயம்
மன உறுதி படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர்: நல்ல நண்பர்களால் வெல்வது நிச்சயம்
UPDATED : அக் 20, 2024 05:48 PM
ADDED : அக் 19, 2024 11:13 PM

பொதுவாக நல்ல உடல்வாகு கொண்ட மனிதர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு மனதளவில் அதிக தைரியம் இருக்கும். எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். ஆனால் சிலரது பேச்சு, நடவடிக்கையால் தங்கள் மன உறுதியை இழந்து விடுகின்றனர்.
கால் ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகிறார், ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர். பெலகாவியின் கானாபுரா கடஞ்சின் கிராமத்தின் பக்கீரப்பா ஹரிஜன், 27. கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. மூன்று சக்கர ஸ்கூட்டரில் சென்று, கால் ஊனமுற்றவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதனால் மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கைக்குரிய நபராக பக்கீரப்பா மாறி உள்ளார்.
இதுகுறித்து மனம் திறந்து அவர் கூறியதாவது:
என்னால் சிறு வயதில் இருந்தே நடக்க முடியாது. கையை தரையில் ஊன்றி தான் நடக்கிறேன். சிறுவயதில் அரசு பள்ளியில் சேர, என்னை பெற்றோர் அழைத்துச் சென்றனர். பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் விடும்படி கூறினர்.
இதனால் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளிபடிப்பு முடிந்ததும், கல்லுாரியில் சேர்ந்து படித்தேன். மாற்றுத்திறனாளி என்பதால், இயற்கையாகவே எனக்கு கொஞ்சம் மன அழுத்தம் இருந்தது. ஆனால், அதில் இருந்து மீண்டு வெளியே வந்தேன்.
மாற்றுத்திறனாளிகள் மன தைரியத்துடன் இருக்க, அவர்களுக்கு ஆதரவாக பேசும் நல்ல நண்பர்கள் தேவை. இதனால் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நண்பனாக இருக்க நினைத்தேன். மாற்றுத்திறனாளிகளை தேடிச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசுவதுடன், இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறேன்.
நல்ல உடல்வாகு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைக்காமல், அவர்கள் மீது அன்பும், கருணையும் காட்ட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.