/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'களவாணி' திரைப்பட பாணியில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்
/
'களவாணி' திரைப்பட பாணியில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்
'களவாணி' திரைப்பட பாணியில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்
'களவாணி' திரைப்பட பாணியில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்
ADDED : ஜன 03, 2024 11:21 PM

பல்லாரி : களவாணி திரைப்பட பாணியில், ஓடும் காரில் காதலிக்கு காதலன் தாலி கட்டினார்.
நடிகர் விமல், நடிகை ஓவியா நடிப்பில் வெளியான, களவாணி திரைப்படத்தில் கதாநாயகியுடன் தப்பிச் செல்லும்போது, காரில் வைத்தே கதாநாயகியின் கழுத்தில், கதாநாயகன் தாலி கட்டுவார். இதேபோன்ற நிகழ்வு கர்நாடகாவில் நடந்து உள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
கொப்பாலைச் சேர்ந்தவர் அமிர்தா, 23. பல்லாரி சிறுகுப்பா தெக்கலகோட்டில் வசிப்பவர் சிவபிரசாத், 25. இவர்கள் இருவருக்கும், சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலித்தனர்.
சிவபிரசாத் வேறு ஜாதி என்பதால், அமிர்தா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனால் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து, அவர் வெளியேறி சிறுகுப்பா வந்தார்.
இதுபற்றி அறிந்த குடும்பத்தினரும், அவரைத் தேடி சிறுகுப்பா வந்தனர். இதற்கிடையில் காதலனை சந்தித்த அமிர்தா, ஒரு காரில் அவருடன் பயணம் செய்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஓடும் காரில் அமிர்தாவுக்கு, சிவபிரசாத் தாலி கட்டினார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். நள்ளிரவு 12:00 மணிக்கு தெக்கலகோட் போலீஸ் நிலையம் சென்று, தஞ்சம் புகுந்தனர்.
கண்ணீருடன் பெற்றோர்
இரவு நேரம் என்பதால், அமிர்தாவை பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு, போலீசார் அனுப்பி வைத்தனர்.அங்கு சென்ற அமிர்தாவின் பெற்றோர், மகளிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அங்கு சென்றனர்.
போலீசாரின் கண்முன்பே அமிர்தாவை அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் வலுக்கட்டாயமாக, காரில் ஏற்ற முயன்றனர். இதை போலீசார் தடுத்தனர். “பெற்றோருடன் செல்ல மாட்டேன். காதல் கணவருடன் தான் வாழ்வேன்,” என, அமிர்தா கூறினார். இதனால் அவரை விட்டுவிட்டு, கண்ணீருடன் பெற்றோர் புறப்பட்டுச் சென்றனர்.