/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் நோயாளிகள் ஓட்டம்
/
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் நோயாளிகள் ஓட்டம்
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் நோயாளிகள் ஓட்டம்
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் நோயாளிகள் ஓட்டம்
UPDATED : அக் 18, 2024 04:53 AM
ADDED : அக் 18, 2024 01:03 AM

பாட்னா: பீஹாரில், தன்னை கடித்த பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபரால், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அலறி ஓடினர்.
பீஹார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவர், வீட்டுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, கொடிய விஷம் உடைய கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. அந்த பாம்பை பிடித்து எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு பிரகாஷ் ஓடிவந்தார்.
கழுத்தில் பாம்புடன் வந்த பிரகாஷை பார்த்து, சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் அலறி ஓடினர். அவரிடம் பாம்பை வெளியே விடும்படி மருத்துவர்கள் கூறிய போதும், அதை பொருட்படுத்தாமல் தனக்கு உடனே சிகிச்சை அளிக்கும்படி வற்புறுத்தினார்.
மேலும், பாம்பின் வாயை பிடித்தபடி தன் அருகிலேயே அதை போட்டு படுத்திருந்தார். இந்த காட்சிகளை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
'பாம்பை கையிலேயே வைத்திருந்தால் எங்களால் சிகிச்சை அளிக்க முடியாது' என்று மருத்துவர்கள் மறுத்ததை தொடர்ந்து, பாம்பை வெளியே விட பிரகாஷ் சம்மதித்தார். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் அவர், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.