/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கழுதை வளர்ப்பில் சாதனை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசிரியர்
/
கழுதை வளர்ப்பில் சாதனை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசிரியர்
கழுதை வளர்ப்பில் சாதனை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசிரியர்
கழுதை வளர்ப்பில் சாதனை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசிரியர்
UPDATED : அக் 20, 2024 05:45 PM
ADDED : அக் 19, 2024 11:14 PM

'என்னை பார் யோகம் வரும்' என்ற வாசகத்துடன், கழுதையின் புகைப்படம் இருப்பதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் கழுதைகளை வளர்த்து, அதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதித்து, சாதனை படைத்துள்ளார் உதவி பேராசிரியர் ஒருவர்.
துமகூரின் மதுகிரியை சேர்ந்தவர் ரங்கேகவுடா, 45. தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக உள்ளார். மதுகிரி அருகே ஊவினஹள்ளி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் வாங்கி, 'கீரா சகார்' என்ற பெயரில் கழுதை பண்ணை நடத்துகிறார். கழுதை பால், சாணம், சிறுநீரை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
கழுதை வளர்ப்பு குறித்து அவர் அருமையாக கூறியதாவது:
'என்னை பார் யோகம் வரும்' என்று, கழுதை படத்தில் இருப்பது உண்மை தான்.
தினமும் கழுதைகளை பார்ப்பதால் தான், இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். ௨ ஏக்கர் நிலத்தில், கழுதை பண்ணை அமைத்து, 100 கழுதைகளை வளர்க்கிறேன். அவைகளுக்கு உணவு வழங்குவதற்காக, ஐந்து ஏக்கர் நிலத்தில் பல்வேறு செடிகளை பயிரிட்டு வளர்க்கிறேன்.
கழுதை பண்ணை என்பது தங்க சுரங்கம் போன்றது. கழுதை பாலில் நிறைய சத்து உள்ளது. தாய்ப்பாலுக்கு நிகரானது கழுதை பால். ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு, தினமும் கழுதை பாலை ஏற்றுமதி செய்கிறேன்.
ஒரு லிட்டர் பாலை 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். கழுதையின் சிறுநீர் ஒரு லிட்டர் 300 ரூபாய்க்கும், கால் கிலோ சாணத்தை 100 ரூபாய்க்கும் விற்கிறேன்.
வரும் நாட்களில் கழுதை பாலில் இருந்து சோப்பு, சாம்பு தயாரிக்கும் திட்டமும் உள்ளது. கழுதையால் பல நன்மைகள் உள்ளன என்பதை, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.