/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சாதித்து காட்ட வயது ஒரு தடை அல்ல! இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதியவர்
/
சாதித்து காட்ட வயது ஒரு தடை அல்ல! இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதியவர்
சாதித்து காட்ட வயது ஒரு தடை அல்ல! இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதியவர்
சாதித்து காட்ட வயது ஒரு தடை அல்ல! இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதியவர்
ADDED : டிச 20, 2025 08:48 AM

பாலக்காடு: ஆசிய மாஸ்டர்ஸ் பவர் லிப்டிங் போட்டியில், 145 கிலோ எடையை துாக்கி இந்தியாவுக்காக தங்கம் வென்று சாதித்துக் காட்டியுள்ளார், பாலக்காட்டை சேர்ந்த முதியவர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முட்டிக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன்,71. இவர், 11 ஆண்டுகளுக்கு முன் கஞ்சிக்கோடு இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், துருக்கி நாட்டின் இஸ்தாம்புல் நகரில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் பவர் லிப்டிங் போட்டியில், 59 கிலோ பிரிவில், 145 கிலோ எடை துாக்கி, இந்தியாவுக்காக தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த 1980ல், கேரளாவின் ஆரம்பகால பளு துாக்கும் வீரர்களில் நானும் ஒருவர். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்காக பதக்கம் வென்று உள்ளேன்.
தொடர்ந்து தேசிய போட்டிகளில் நான்காம் இடம்பெற்றேன். குடும்ப பணி காரணமாக இத்துறையை கைவிட்டேன்.
அதன்பின், ஓய்வு காலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயிற்சி செய்யத் துவங்கினேன். தொடர்ந்து மாநில மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றேன். தேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு இரு முறை சாதனையை முறியடித்தேன். 'நேஷனல் பெஞ்ச்பிரஸ் சாம்பியன்ஷிப்' பதக்கம் பெற்றேன்.
இதன் வாயிலாக, சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக தங்கம் வென்றேன். தேசிய கயிறு இழுப்பு வீராங்கனையாக இருந்த மகள் பிரியா தான், என் பயிற்சியாளர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

