/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
டீச்சர்களுக்கு வந்தாச்சு போட்டி கேரளாவில் ஏ.ஐ., ரோபோ அறிமுகம்
/
டீச்சர்களுக்கு வந்தாச்சு போட்டி கேரளாவில் ஏ.ஐ., ரோபோ அறிமுகம்
டீச்சர்களுக்கு வந்தாச்சு போட்டி கேரளாவில் ஏ.ஐ., ரோபோ அறிமுகம்
டீச்சர்களுக்கு வந்தாச்சு போட்டி கேரளாவில் ஏ.ஐ., ரோபோ அறிமுகம்
UPDATED : மார் 08, 2024 11:07 AM
ADDED : மார் 07, 2024 11:37 AM

திருவனந்தபுரம், மாணவர்களை அடிக்காத, திட்டாத, வேலை வாங்காத, ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும், சகஜமாக உரையாடக் கூடிய புதிய டீச்சர் கேரளாவில் பிரபலமடைந்துள்ளது. ஐரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டீச்சர், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோ.
கேரளாவின் திருவனந்த புரத்தின் கடுவயல் பகுதி யில், கடுவயல் தங்கல் அறக்கட்டளை சார்பில் இயங்கும் உயர் நிலைப் பள்ளியில், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'மேக்கர்லேப்ஸ் எஜுடெக்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோ டீச்சரை அறிமுகம் செய்துள்ளனர்.
மத்திய அரசின் அடல் புதுமை ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ டீச்சருக்கு, ஐரிஸ் என்று பெயரிட்டுள்ளனர். புடவை கட்டியுள்ள, இந்த ரோபோ டீச்சர், மூன்று மொழிகளில் உரையாற்றக் கூடியது.
பல விஷயங்கள் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மாணவர்களுக்கு புரியும் வகையில், இந்த டீச்சர் விளக்கம் அளிக்கும். எந்த கடினமான கேள்விக்கும் பதிலை பெற முடியும். மாணவர்களுடன் கலந்துரையாடும் வகையில், பாடங்களை சொல்லிக் கொடுக்கும் வகையில், ஐரிஸ் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ரோபோ அல்ல. மனித டீச்சர்களைப் போன்று கலந்துரையாடும், மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் என, பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த புதிய அனுபவம் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

