/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வாழ்வில் மறக்க முடியாத பயணம்: விமானத்தில் குழந்தைகள் குஷி
/
வாழ்வில் மறக்க முடியாத பயணம்: விமானத்தில் குழந்தைகள் குஷி
வாழ்வில் மறக்க முடியாத பயணம்: விமானத்தில் குழந்தைகள் குஷி
வாழ்வில் மறக்க முடியாத பயணம்: விமானத்தில் குழந்தைகள் குஷி
ADDED : ஜன 24, 2025 11:13 PM

கோவை ; தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையிலிருந்து, 15 குழந்தைகள் முதல் முறையாக விமானம் மூலம் கோவைக்கு, மகிழ்ச்சி பயணமாக அழைத்து வரப்பட்டனர்.
கோவை வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, 'பிளைட் ஆப் பேன்டசி' என்ற நிகழ்ச்சி மூலம், சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து, 15 குழந்தைகளை கோவைக்கு விமானத்தில் நேற்று, அழைத்து வந்து மகிழ்ச்சிப்படுத்தினர்.
இது குறித்து, நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில், கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 -ன் பொருளாளர் அரவிந்தன் கூறியதாவது:
'பிளைட் ஆப் பேன்டசி' என்ற திட்டம், குழந்தைகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எஸ்., சர்வோதயா இல்லத்திலிருந்து, 15 குழந்தைகளை, இன்று (நேற்று) சென்னையிலிருந்து விமானத்தில் அழைத்து வந்தோம். அவர்கள் ஈஷா யோகா மையம், ஸ்னோ பேன்டஸி ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் மாலை, 6:30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறு, அவர்கூறினார்.
பயண அனுபவம் குறித்து குழந்தைகள் கூறுகையில், 'இது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எங்கள் ஆசை நிறைவேறியது' என்றனர்.
கோவை ரவுண்ட் டேபிள் 20 -ன் தலைவர் அருண் குணசேகரன்; மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள், 100-ன் தலைவர் நரேஷ், ஆகியோர் பங்கேற்றனர்.

