/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ராமர் கோவில் பெயரில் பலே மோசடி: 'ஆன்லைனில்' லட்டு விற்கும் 'அல்வா' கும்பல்
/
ராமர் கோவில் பெயரில் பலே மோசடி: 'ஆன்லைனில்' லட்டு விற்கும் 'அல்வா' கும்பல்
ராமர் கோவில் பெயரில் பலே மோசடி: 'ஆன்லைனில்' லட்டு விற்கும் 'அல்வா' கும்பல்
ராமர் கோவில் பெயரில் பலே மோசடி: 'ஆன்லைனில்' லட்டு விற்கும் 'அல்வா' கும்பல்
UPDATED : ஜன 18, 2024 03:40 PM
ADDED : ஜன 18, 2024 12:11 AM

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவில் லட்டு என்ற பெயரில், 'அமேசான்' விற்பனை தளம் வாயிலாக லட்டு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல்கள் குறித்து கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. நாடு முழுதும் இதை பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
அயோத்தி ராமர் கோவில் லட்டு என்ற பெயரில், பிரபல ஆன்லைன் விற்பனை தளமான, 'அமேசான்' வாயிலாக சிலர் லட்டுகளை விற்று வருகின்றனர்.
தனியார் நிறுவனம் ஒன்று 250 கிராம் லட்டுகளை, ராமர் கோவில் பிரசாதம் என குறிப்பிட்டு, தள்ளுபடி போக 350 ரூபாய்க்கு விற்கிறது.
மற்றொரு நிறுவனம் அயோத்தி ராம ஜென்ம பூமியின் ரகுபதி லட்டு பிரசாதம் என குறிப்பிட்டு, ஒரு கிலோ லட்டுகளை 799 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
அதே போல் காதி ஆர்கானிக் என்ற தனியார் நிறுவனம், இலவச ராமர் கோவில் பிரசாதம் என தங்களது இணையதளத்தில் விளம்பரப்படுத்தி உள்ளது.
இதை அறிந்து ஏராளமானோர் அந்த இணையதளத்துக்கு சென்று இலவச பிரசாதத்திற்கு விண்ணப்பித்தனர். அந்த தகவலை பெற்று, தங்கள் தயாரிப்புகளை அவர்களிடம் விற்க முயன்றுள்ளனர்.
இது பற்றி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
ராமர் கோவில் திறப்பு விழாவை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் பணம் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன. ராமர் கோவில் பெயரில் நன்கொடை திரட்ட முயன்றவர்கள், கும்பாபிஷேகத்திற்கு போலி வி.ஐ.பி., அனுமதி அட்டையை வழங்க முயன்ற கும்பல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்நிலையில் ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் மோசடியில் இறங்கியுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கும், ராமர் கோவில் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பற்றி எங்களது வழக்கறிஞர் குழு காவல் துறையில் புகார் அளிக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.