உள்ளடக்கத்திற்கு செல்ல

ஆம்புலன்சில் பிறந்தது குழந்தை; ஒட்டன்சத்திரம் தம்பதி மகிழ்ச்சி
ஆம்புலன்சில் பிறந்தது குழந்தை; ஒட்டன்சத்திரம் தம்பதி மகிழ்ச்சி
UPDATED : ஜூலை 06, 2026 06:02 AM
ADDED : ஜூலை 06, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதே பகுதியை சேர்ந்த மதன் மனைவி அழகு சுந்தரி. பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன், சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.
வாகன டிரைவராக ஜீவரத்தினம், மருத்துவ உதவியாளராக காயத்ரி இருந்தனர். ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலை, 4:00 மணிக்கு சென்றபோது அழகுசுந்தரிக்கு, பிரசவ வலி அதிகரித்தது.
காயத்ரி முதலுதவி அளிக்க, அழகு சுந்தரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தை நலமாக உள்ளனர்.
