/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைக்கும் பசவம்மா
/
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைக்கும் பசவம்மா
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைக்கும் பசவம்மா
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைக்கும் பசவம்மா
UPDATED : ஜன 02, 2025 08:22 PM
ADDED : டிச 29, 2024 11:04 PM

கலபுரகி டவுனில் வசிப்பவர் பசவம்மா தேவனுார், 55. தொழுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுவர்களுக்கு, தேவையான உதவிகளை கணவர் ஹனுமந்தாவுடன் சேர்ந்து செய்து வருகிறார்.
இதுகுறித்து பசவம்மா தேவனுார் கூறியதாவது:
ஆட்டோ ஓட்டுநர்
எனது பெற்றோரும், கணவரின் தாயும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இறந்து விட்டனர். அவர்கள் உயிருடன் இருந்த போது, தொழுநோயால் அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து உள்ளேன். தொழுநோயாளிகள் யாரும் கஷ்டப்பட கூடாது.
அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இதுபற்றி எனது கணவர் ஹனுமந்தாவிடம் கேட்ட போது, அவரும் சம்மதித்தார்.
அவர் ஆட்டோ தான் ஓட்டுகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, தொழுநோயாளிகளுக்கு உதவி செய்ய ஒதுக்குகிறோம்.
தொழுநோயால் பாதிக்கப்படுபவர்களை அவர்களின் குடும்பத்தினரே ஒதுக்குகின்றனர். வீட்டில் இருந்து வெளியே அடித்து விரட்டுகின்றனர். இதனால் கோவில் வாசலிலும், குளக்கரையிலும் படுத்து துாங்குகின்றனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவும் கிடைப்பது இல்லை.
பிச்சை எடுக்க விடாதீர்
தொழுநோயாளிகளை நானும், கணவரும் சேர்ந்து ஆட்டோவில் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்கிறோம். அவர்களுக்கு உடலில் ஏதாவது புண் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறோம். எங்கள் பிள்ளைகளே எங்களை கவனித்து கொண்டது இல்லை.
ஆனால் நீங்கள் கருணை காட்டுகிறீர்களே என்று சொல்லி, தொழுநோயாளிகள் நிறைய பேர் எங்களிடம் அழுது உள்ளனர்.
அவர்களின் வலி, வேதனை நினைத்து நாங்களும் கண்கலங்கி நின்று உள்ளோம். தொழுநோயாளிகளை தயவுசெய்து குடும்பத்தினர் அரவணையுங்கள். தெருவில் பிச்சை எடுக்க விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.