/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு பின்னால் கட்டாயம் ஒரு ஆண் இருப்பார்'
/
'ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு பின்னால் கட்டாயம் ஒரு ஆண் இருப்பார்'
'ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு பின்னால் கட்டாயம் ஒரு ஆண் இருப்பார்'
'ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு பின்னால் கட்டாயம் ஒரு ஆண் இருப்பார்'
UPDATED : ஆக 03, 2025 09:29 AM
ADDED : ஆக 02, 2025 11:49 PM

தி ருச்சி கல்லாமேடு பகுதியை சேர்ந்த இளவரசி, குடும்பத்தோடு கோவைக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. தற்போது தடாகம் ரோடு கோவில்மேடு பகுதியில் வசிக்கின்றனர்.
மகள் காயத்ரி பிளஸ் 1, மகன் மனோஜ், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். பாரதி பார்க் சாலையில், இளவரசி தள்ளுவண்டியில் பழரசக் கடை நடத்தி வருகிறார்.
யாரையுமே எதிர்பார்க்காம, தன்னை நம்பணும் அப்படீங்கற எண்ணம் எப்போது வந்துச்சு உங்களுக்கு?
என் வீட்டுக்காரரு ஆம்னி பஸ் டிரைவரா இருக்காங்க. திருச்சியில இருந்து கோவைக்கு வந்த புதுசுல, பணத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. குடும்ப பாரத்தை சுமக்கறதுல அவருக்கு பக்க பலமாக இருக்கலாமேன்னு தோணிச்சு. மொதல்ல ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போனேன்.
அதுல அவ்வளோ இஷ்டப்படல. சரி, நாமளே சொந்தக் கால்ல நிக்கலாமேன்னு வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ, இந்த தள்ளுவண்டி, பொருளாதார உதவி, கூடவே முக்கியமான ஒன்ன குடுத்தாரு. அதுதான் நீங்க சொன்ன தன்னம்பிக்கை. அதுல வந்தது தான் இந்த சம்பாத்தியம் எல்லாம்.
பழ வியாபாரம் பரவாயில்லையா?
ஒரு நாளைக்கு, பழங்களோட விலைய பொருத்து 5,000 இல்லேன்னா 3,000 ரூபாக்கு பழங்கள, மார்க்கெட்ல இருந்து வாங்கிட்டு வருவேன். எப்படியும் ஒரு நாளைக்கு, ஆயிரம் ரூபா வரைக்கும் லாபம் வந்துரும். வெயிலா இருக்குற காலத்துல இன்னும் கொஞ்சம் வியாபாரம் ஆகும். உழைச்சு சம்பாதிக்குற பணத்தோட வாசமே தனியா தெரியும் பாருங்க.
பெரிய ஆசைன்னு ஏதாவது இருக்கா?
அப்படின்னு சொல்ல முடியாது. பொண்ணு, பையன நல்லபடியா படிக்க வைக்கணும். இது மட்டும் தான் எங்களால முடியும். ஒவ்வொரு ஆணோட முன்னேற்றத்துக்கு, பின்னாலயும் ஒரு பெண் இருக்குறதா சொல்வாங்க. அதுபோல, ஒவ்வொரு பெண்ணோட முன்னேற்றத்துக்கு பின்னாலும், கட்டாயம் ஒரு ஆம்பள இருப்பாங்க. என்னோட வாழ்க்கையில அது நிசமாச்சு.