/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரோட்டுக்கடையில் பில்கேட்ஸ் 'டீ'
/
ரோட்டுக்கடையில் பில்கேட்ஸ் 'டீ'
ADDED : மார் 01, 2024 01:03 AM

நாக்பூர்
:மஹாராஷ்டிராவில் சாலையோர கடையில், 'மைக்ரோசாப்ட்'
நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தேநீர் அருந்தினார். இது
தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.நம் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீபத்தில் வந்தார்.
நேற்று
முன்தினம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை
சந்தித்தார்.இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிராவில் நாக்பூரின்
சதர் பகுதியில் உள்ள சாலையோர கடையில் தேநீர் பருகினார். நாக்பூரில்
மிகவும் ஸ்டைலாக தேநீர் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுபவர் டோலி
சாய்வாலா. சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படும் இவரது கடைக்கு
நேற்று தேநீர் அருந்த பில்கேட்ஸ் சென்றார்.அப்போது எடுக்கப்பட்ட
வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த
வீடியோவில், 'ஒரு டீ வேண்டும்' என பில்கேட்ஸ் கேட்க, டோலி சாய்வாலா
தன் ஸ்டைலில் தேநீர் தயாரித்து கொடுக்க, அதை பில்கேட்ஸ் ரசித்து
பருகும் காட்சி இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்த வீடியோ பதிவின்
கீழ், 'இந்தியாவில் திரும்பும் திசை எங்கும் புதுமையை காணலாம்;
அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும்' என்றும் பில்கேட்ஸ்
குறிப்பிட்டுள்ளார்.

