தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/30 ஆண்டுக்கு பின் பஸ் வசதி: கிராமத்தில் உற்சாக 'வெள்ளம்'

30 ஆண்டுக்கு பின் பஸ் வசதி: கிராமத்தில் உற்சாக 'வெள்ளம்'

30 ஆண்டுக்கு பின் பஸ் வசதி: கிராமத்தில் உற்சாக 'வெள்ளம்'


UPDATED : அக் 06, 2026 05:04 AM

ADDED : அக் 05, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 05:04 AM ADDED : அக் 05, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பின் பஸ் வசதி கிடைத்ததை கொண்டாடும் வகையில், கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியதோடு, பஸ்சுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பல்லடம் தாலுகா, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருள்புரம்-கணபதிபாளையம் வழித்தடத்தில் உள்ள இந்த கிராமத்துக்கு கடந்த 30 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், 2 கி.மீ. தொலைவில் உள்ள அருள்புரம் அல்லது கணபதிபாளையத்துக்கு நடந்தோ, ஆட்டோவிலோ சென்று வந்தனர்.

இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சமீபத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன்படி, நேற்று காலை 30 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக அரசு பஸ் இயக்கப்பட்டது. பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் விசில் அடித்தும், கைதட்டியும் வரவேற்றனர். பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியதுடன் பஸ்சுக்கு ஆரத்தி எடுத்தனர். டிரைவர், நடத்துனருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், ''எங்கள் கிராமத்தில் இயக்கப்பட்ட ஒரே ஒரு மினி பஸ்சும் சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சமீபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதன் பயனாக 30 ஆண்டுகளுக்குப் பின் பஸ் வசதி கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில் மேலும் 2 பஸ்கள் இயக்க வேண்டும்'' என்றனர்.

2 படங்கள்

முப்பது ஆண்டுகளுக்குப் பின் கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்துக்கு பஸ் வசதி கிடைத்தது. கிராமத்துக்கு வந்த பஸ்சில் ஏறி, மகிழ்ச்சியோடு 'செல்பி' எடுத்துக்கொண்ட மக்கள்.

டிரைவர், கண்டக்டருக்கு மாலை, சால்வை அணிவித்த மாணவ, மாணவியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us