தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பாதுகாப்பு பணி பெண் போலீசுக்கு உடல் நலனுக்கு பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு பணி பெண் போலீசுக்கு உடல் நலனுக்கு பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு பணி பெண் போலீசுக்கு உடல் நலனுக்கு பாதுகாப்பு இல்லை

5


UPDATED : அக் 05, 2026 09:57 AM

ADDED : அக் 04, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 09:57 AM ADDED : அக் 04, 2026 05:36 PM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் பெண் போலீசாருக்கு கழிப்பறை வசதி இல்லாததால், பல மணி நேரம் இயற்கை உபாதையை கட்டுப்படுத்திய சூழலிலேயே பணி செய்யும் சூழல் தொடர்கிறது.

கோவைக்கு நேற்று முதல்வர் வருகை தந்தார். முக்கிய ரோடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக நிகழ்ச்சிக்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண் போலீசார் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

நீண்ட நேரம் தொடர்ந்து பாதுகாப்பு பணி செய்வதால், நீடிக்கும் வெப்பத்தால் போலீசாருக்கு குடிநீர் அவசியம். தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதால் பலரும் தண்ணீர் குடிப்பதை தவிர்கின்றனர். மாதவிடாய் காலமாக இருப்போருக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது.

வி.ஐ.பி.,க்கள் வரும் நேரம் சில நிமிடங்களாக இருந்தாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பல மணி நேரத்துக்கு முன்பே பணியிடத்துக்கு சென்று காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், வி.ஐ.பி., கடந்து செல்லும் நேரத்தைவிட, அவர்களது வருகைக்காக காத்திருக்கும் நேரமே போலீசாருக்கு பெரும் சவாலாகிறது.

இது முதல்வர் வருகையுடன் மட்டும் தொடர்புடைய பிரச்னை அல்ல. முதல்வர் உள்ளிட்ட எந்த வி.ஐ.பி., வந்தாலும் நீண்ட நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாருக்கு இதே நிலை ஏற்படுகிறது.

வி.ஐ.பி., பாதுகாப்பு ஏற்பாடுகளில் சாலைத்தடுப்பு, போக்குவரத்து மாற்றம், போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கின்றனர். அதேபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் அடிப்படை தேவைகளையும் திட்டமிட வேண்டியது அவசியம். நீண்ட நேர பாதுகாப்பு பணிக்கு செல்லும் பெண் போலீசாரின் வசதிக்காக தற்காலிக கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பெண் போலீசார் கூறுகையில்,' பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரை ஈடுபடுத்துகிறோம் என்றால் அதற்கேற்ப அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அப்போது பணியும் சிறப்பாக இருக்கும். பாதுகாப்பிலும்குளறுபடி ஏற்படாது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us