தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ரூ.2 கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு தந்த தொழிலதிபர்

ரூ.2 கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு தந்த தொழிலதிபர்

ரூ.2 கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு தந்த தொழிலதிபர்


UPDATED : ஆக 16, 2025 07:05 AM

ADDED : ஆக 15, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2025 07:05 AM ADDED : ஆக 15, 2025 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரத்தநாடு, :அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கிய தொழிலதிபரை கிராம மக்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 250 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளர்ச்சிக்காக, கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து, “திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை” என்ற அறக்கட்டளையை உருவாக்கி, செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்த தொழிலதிபரான கோவிந்தராஜ், 80, பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 30,000 சதுரடி நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார்.

இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ், நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us