/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
நெதர்லாந்து இளைஞரை கரம் பிடித்த கோவை பெண்
/
நெதர்லாந்து இளைஞரை கரம் பிடித்த கோவை பெண்
ADDED : ஜன 20, 2025 11:32 PM

கோவை; கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே, சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் நெதர்லாந்து நாட்டில் உள்ள, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, நெதர்லாந்து நாட்டில் உள்ள 'டிவி' ஒன்றில் பணிபுரியும், ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்ய, இருவீட்டார் சம்மதத்தையும் பெற்றனர்.
இவர்களது திருமணம், கோவை இடிகரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், இருவீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
தமிழர் பாரம்பரிய முறைப்படி, அக்னி சாட்சியாக, அம்மி மிதித்து திருமணம் நடந்தது. திருமணத்தில் பங்கேற்ற மணமகன் ரமோன் ஸ்டீன்ஹீஸ் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும், பட்டு வேட்டி, சட்டை, பட்டுச் சேலை அணிந்திருந்தனர்.