/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர தகுதி
/
மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர தகுதி
மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர தகுதி
மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர தகுதி
UPDATED : பிப் 18, 2024 10:49 AM
ADDED : பிப் 18, 2024 12:33 AM

கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா, ஐ.ஐ.டி., மெட்ராஸில், பி.எஸ்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அனைவருக்கும் 'ஐ.ஐ.டி.,-எம் (மெட்ராஸ்)' கீழ், பள்ளி மாணவர்கள், நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், இளங்கலை அறிவியல் (பி.எஸ்.,), நான்கு ஆண்டுக்கால ஆன்லைன் படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.கடந்த டிசம்பரில் நடந்த இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா, சாதனை படைத்துள்ளார்.
கோவையில் 30 மாணவர்களுக்கும் மேல் இத்தேர்வு எழுதினர். கீர்த்தனா மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாணவி கீர்த்தனா கூறுகையில், ''ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில், அப்ளிகேஷன் சார்ந்த கேள்விகளே அதிகம் இடம்பெற்றன. இது ஆன்லைன் படிப்பு என்பதால், பிளஸ் 2 கல்வித்தகுதி கொண்ட, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கடந்த செப்டம்பரில் நடந்த, முதல் நுழைவுத்தேர்வில் இரு பாடங்களில் தோல்வியடைந்தேன். ஆனாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியில் மீண்டும் முயற்சித்தேன். இரண்டாவது முயற்சியில், தகுதி பெற்றேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.