/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மாரடைப்பால் இறந்த தாய் உடலை வணங்கி தேர்வெழுத சென்ற மகள்
/
மாரடைப்பால் இறந்த தாய் உடலை வணங்கி தேர்வெழுத சென்ற மகள்
மாரடைப்பால் இறந்த தாய் உடலை வணங்கி தேர்வெழுத சென்ற மகள்
மாரடைப்பால் இறந்த தாய் உடலை வணங்கி தேர்வெழுத சென்ற மகள்
UPDATED : மார் 19, 2025 05:04 AM
ADDED : மார் 19, 2025 01:40 AM

ஞ்சாவூர்: திடீர் மாரடைப்பால் தாய் இறந்துவிட, தீரா துயரிலும், அவரது உடலை வணங்கி விட்டு, பிளஸ் 2 தேர்வெழுத சென்ற மகளை பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா, 17; ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயோ மேக்ஸ் படித்து வருகிறார்.
நேற்று உயிரியல் பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வுக்கு காவியா தயாரான நிலையில், கலா அதிகாலையில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதில், நிலை குலைந்த காவியா, எப்படியாவது தேர்வை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில், தாயின் உடல் முன் கதறி அழுதபடி, அவரது பாதத்தை தொட்டு வணங்கி விட்டு தேர்வுக்கு சென்றார்.
இதைப்பார்த்த உறவினர்கள், கிராம மக்கள் கண் கலங்கி நின்றனர்.
பள்ளிக்கு வந்த காவியாவை அவரது சக தோழியர் கட்டியணைத்து, ஆறுதல் கூறி தேர்வுக்கு அழைத்துச் சென்றனர்.
காவியா கூறியதாவது:
என் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். தாய் தான் குடும்பத்தின் துாண்.
எனக்கு அக்கா, அண்ணன் உள்ளனர். அண்ணன் கல்லுாரியில் படிக்கிறார். அக்காவுக்கு 15 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
என் அம்மா எப்போதும், 'படிப்பு தான் முக்கியம். படித்து ஆளாகி அப்பாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்' என, கூறினார்.
நான் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுத சென்ற போதும், என் அம்மா காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தேர்வெழுதுவது வழக்கம். அவர் இறந்ததால், என் வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த தையல் தொழிலாளி கணேசன், 50, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.
அவரது மகன் மணிகண்டன், 17, நேற்று தந்தை உடலை வணங்கி விட்டு, பிளஸ் 2 வரலாறு தேர்வை எழுத சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.