/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சுனாமி பேரழிவில் தப்பினாலும் நித்தம் செத்து பிழைக்கிறோம்; நாகையில் குடியிருப்புவாசிகள் கதறல்
/
சுனாமி பேரழிவில் தப்பினாலும் நித்தம் செத்து பிழைக்கிறோம்; நாகையில் குடியிருப்புவாசிகள் கதறல்
சுனாமி பேரழிவில் தப்பினாலும் நித்தம் செத்து பிழைக்கிறோம்; நாகையில் குடியிருப்புவாசிகள் கதறல்
சுனாமி பேரழிவில் தப்பினாலும் நித்தம் செத்து பிழைக்கிறோம்; நாகையில் குடியிருப்புவாசிகள் கதறல்
ADDED : மார் 03, 2025 07:49 AM

நாகப்பட்டினம்: நாகையில், சுனாமி குடியிருப்புகள் பராமரிப்பின்றி இடிந்து விழுவதால், அவற்றில் குடியிருக்கும் மக்கள் தவித்து வருகின்றனர்.
நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சூர்யா நகரில், சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 60 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள், நம்பியார் நகர் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2005ம் ஆண்டு, டிசம்பர், 7ல், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
வீடுகளில் போதுமான இடவசதி மற்றும் தரமாக கட்டவில்லை எனக்கூறி, மீனவர்கள் குடியேற மறுத்து விட்டனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுனாமி பாதிப்பு மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
அந்த வீடுகள் முறையான பராமரிப்பின்றி, கான்கிரீட்கள் பெயர்ந்து விழுகின்றன. அடிக்கடி பலரும் காயமடைந்து வருகின்றனர். தகவலறிந்து நேற்று த.வெ.க., நாகை மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் அக்கட்சி பிரமுகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அங்கு திரண்ட மக்கள் கூறியதாவது: குருவிக்கூடு போல உள்ள வீடுகளில், 2008 முதல் தங்கியுள்ளோம். 'வீடுகளை சீரமைத்து தருகிறோம்' என்று அதிகாரிகள் கூறுகின்றனரே தவிர, இதுவரை சரி செய்து தரவில்லை.
எந்த நேரத்திலும் விழும் நிலை உள்ளதால், மழைக்காலங்களில் யாரும் வீட்டிற்குள் இருக்க மாட்டோம். எப்போது கான்கிரீட் இடிந்து விழும் என்று தெரியாத நிலையில், நித்தம் செத்து பிழைக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் மட்டும், அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வருவர். பிறகு எட்டிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் போராட்டம் நடத்துவதாக தெரிந்தால், எங்களை தேடி வரும் நகராட்சி அதிகாரிகள், 'வீடுகள் குடியிருக்க லாயக்கற்றது என்று தெரிந்தும் ஏன் இருக்கிறீர்கள். வீடுகளை காலி செய்யுங்கள்' என, மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.