/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆயிரம் முறை திருடிய அபூர்வ வக்கீல்; 85 வயதுக்குள் 95 முறை கைதானவர் மரணம்!

UPDATED : ஏப் 22, 2024 03:56 PM
ADDED : ஏப் 22, 2024 03:52 PM

புதுடில்லி: தானி ராம் மிட்டல் என்பவர், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல் நிபுணர் என நம்பப்படும் மிட்டல், தனக்கு ஏராளமான தகுதிகள் இருந்தபோதிலும், திருட்டு வாழ்க்கையைத் தனது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்.
வெவ்வேறு மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு, மோசடி, ஆள் மாறாட்ட வழக்குகளில் தொடர்புடைய தானி ராம் மிட்டல், 85 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மோசடி வேலையை 1964ல் துவங்கி, 95 முறை கைதாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஹரியானா மாநில ஜஜ்ஜார் கோர்ட்டில் நீதிபதியாக ஆள் மாறாட்டம் செய்து, பலே கிரிமினல்களை விடுவிக்க உத்தரவு போட்டது இவரது தகிடுதத்தங்களில் ஹைலைட்டான விஷயம்.