sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

சணல் கயிற்றில் டி.வி.ஆர்., ஓவியம்; சங்கர் பொன்னர் பள்ளி மாணவர்கள் சாதனை

/

சணல் கயிற்றில் டி.வி.ஆர்., ஓவியம்; சங்கர் பொன்னர் பள்ளி மாணவர்கள் சாதனை

சணல் கயிற்றில் டி.வி.ஆர்., ஓவியம்; சங்கர் பொன்னர் பள்ளி மாணவர்கள் சாதனை

சணல் கயிற்றில் டி.வி.ஆர்., ஓவியம்; சங்கர் பொன்னர் பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : செப் 30, 2025 02:54 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாளை யொட்டி அவரது உருவப்படத்தை திண்டுக்கல் மாவட்டம் பழநி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சணல் கயிற்றை பயன்படுத்தி வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

பழநி தும்பல பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 13 மாணவர்கள் இணைந்து தினமலர் 75வது பவள விழா, டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளையொட்டி அவரின் உருவப் படத்தை சணல் கயிறுகளால் வரைந்தனர்.

கல்வி மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் பள்ளி வரலாறு ஆசிரியர் காளிமுத்து கூறியதாவது: டி.வி.ஆர்., இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்ததற்கு முக்கிய பங்காற்றி உள்ளார். ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டு கல்விக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார்.

இவரை பற்றி மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை கூறி வருகிறோம். அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் இவருடைய எழுத்துக்கள் இருந்துள்ளது. தற்போது வரை தினமலர் நாளிதழ் புரட்சி செய்து வருகிறது என்றார்.

10 அடி உயரம் 6 அடி அகலம் ஓவிய ஆசிரியர் விஜி கூறியதாவது: அக். 2ல் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாள். இதையொட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தி 13 மாணவர்கள் இணைந்து 150 அடி சணல் கயிறை துண்டு துண்டுகளாக வெட்டி டி.வி.ஆரின் உருவப் படத்தை உருவாக்கி உள்ளனர்.

ஓவியம் 10 அடி உயரம் 6 அடி அகலத்தில் உள்ளது. பள்ளி தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் ஆகியோர் இப்படத்தை வரைய அனுமதி அளித்து உறுதுணையாக இருந்தனர் என்றார்.






      Dinamalar
      Follow us