ADDED : ஆக 16, 2026 01:11 AM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், 80வது சுதந்திர தின விழா நடந்தது.
வளர்ப்பு யானைகள் பொம்மி, பாமா, செந்தில் வடிவு, சேரம்பாடி சங்கர், காமாட்சி மீது பாகன்கள், தேசியக்கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யாதார் தேசிய கொடி ஏற்றினார். வன ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். வரிசையில் நின்றிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது. நிகழ்ச்சியை சுற்றுலா பயணியர் வெகுவாக ரசித்தனர்.
விழாவில், வனச்சரகர்கள் ராமர், சிவக்குமார், பாலாஜி, பாஸ்கர், சீனிவாசன், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சுற்றுலா பயணியர் பங்கேற்றனர். குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையத்தில் சுதந்திர தின விழாவில், கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், தேசிய கொடியேற்றினார்.
விழாவில், கேரளாவின் பாரம்பரிய போர்கலையான களரிப்பயிற்றுவில் ராணுவ வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வாள் சண்டை, ஈட்டிப் போர், நெருப்பு நடனம் மற்றும் தேசிய கொடியுடன் மனித பிரமிடு அமைத்து நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
