/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சோலார், மின்சார சைக்கிள் கண்டுபிடித்து பொறியியல் மாணவர்கள் அசத்தல்
/
சோலார், மின்சார சைக்கிள் கண்டுபிடித்து பொறியியல் மாணவர்கள் அசத்தல்
சோலார், மின்சார சைக்கிள் கண்டுபிடித்து பொறியியல் மாணவர்கள் அசத்தல்
சோலார், மின்சார சைக்கிள் கண்டுபிடித்து பொறியியல் மாணவர்கள் அசத்தல்
UPDATED : நவ 22, 2024 02:45 PM
ADDED : நவ 22, 2024 04:30 AM

மேலுார்: மதுரை கிடாரிபட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் இப்ராஹிம் முகமது, அபுதாஹிர், லட்சுமணன், காளிராஜா, ஹரீஸ்வரன், குரு ராகவன் ஆகியோர் சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தில் இயங்கும், மடிக்கும் வகையிலான சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.
சோலார் சைக்கிள் குறித்து மாணவர்கள் கூறியதாவது: சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிளை ஓட்டும் போது சோலார் பேனல் விரித்தபடி இருந்தால் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படும். எனவே பாதியாக மடித்து மூன்று 'ஸ்க்ரூ' மூலம் பொருத்த முடியும். சைக்கிளை நிறுத்தி வைக்கும்போது சூரிய ஒளியை அதிகளவில் உறிஞ்சுவதற்கு வசதியாக, 'சோலார் பேனலை' முழுமையாக விரிக்க முடியும்.
இச் சைக்கிளை சூரிய சக்தியால் நேரடியாகவோ அல்லது வழக்கமான போர்ட்டபிள் சார்ஜர் மூலம் ஆகிய 2 வகையிலும் 'சார்ஜிங்' செய்யலாம். சைக்கிளில் பொருத்ததியுள்ள ஒரு சோலார் சார்ஜ் கண்ட்ரோலர், பேட்டரியின் தொடர்ச்சியான சார்ஜிங்கை உறுதி செய்வதோடு, சேமிக்கப்பட்ட ஆற்றல், ஹப் மோட்டாரை இயக்கி நம்பகமான பயணத்தை வழங்குகிறது.
சைக்கிள் முழு சார்ஜில் இருந்தால் மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் 60 கி.மீ., வரை செல்லும். இந்த சைக்கிள் எரிபொருளை சார்ந்து இருக்காமல் குறைந்த செலவில், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் செயல்படுவது போல் கண்டுபிடித்துள்ளோம்.
மின்சார சைக்கிள்
மின்சார சைக்கிள் 36 வோல்ட், 13 ஆம்பியர் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 250 வாட்ஸ் அப் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. இப் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கி.மீ., வேகத்தில் 55 கி.மீ., வரை செல்லலாம். ரூ.55ஆயிரத்திற்கு விற்பனையாகும் சைக்கிளை மாணவர்கள் ரூ 28 ஆயிரத்து 500 விற்பனை செய்யும் அளவுக்கு தரமான முறையில் கண்டுபிடித்துள்ளனர்.
இம் மாணவர்களை கல்லுாரி சேர்மன் மாதவன், தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் தனுஷ்குமார், செயல் இயக்குநர் தினேஷ், இணைச் செயலாளர் ஜெகன், ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், மீனாட்சிசுந்தரம், முதல்வர் சரவணன், டீன் பாராட்டினர்