/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பஸ் ஓட்டுனர்களின் கைகளை கட்டி போட்ட விவசாயிகள்
/
பஸ் ஓட்டுனர்களின் கைகளை கட்டி போட்ட விவசாயிகள்
UPDATED : டிச 10, 2024 03:54 PM
ADDED : டிச 10, 2024 07:15 AM

பெலகாவி: விவசாயிகளின் சாலை மறியலை பொருட்படுத்தாமல் பஸ் சென்றதால், கோபமடைந்த விவசாயிகள் பஸ்சை தடுத்து, ஓட்டுனரின் கையை கட்டி போட்டனர்.
பெலகாவியில், விவசாயிகள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சுவர்ண விதான் சவுதா பாதையில், ஹலகா அருகில் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்தனர்.
'கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும், கலசா - பண்டூரி திட்டத்தை செயல்படுத்துவது' உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசை வலியுறுத்தினர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால கூட்டம் துவங்கிய முதல் நாளே, விவசாயிகள் தீவிர போராட்டத்தில் இறங்கினர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர்.
பல வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. அப்போது கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் இரண்டு பஸ்களை ஓட்டுனர்கள் ஓட்டி சென்றனர். இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், ஓடிச்சென்று, பஸ்களை வழி மறித்தனர். பஸ்சில் ஏறி ஓட்டுனர்களின் கைகளை பச்சை நிற டவலால் கட்டி போட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து, அவர்களின் கட்டுகளை அவிழ்த்து, விடுவித்தனர்.

