தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'மாஜி' அமைச்சர் நடத்திய கோலப்போட்டி; அவருக்கே எதிராக திரும்பியதால் சர்ச்சை

 'மாஜி' அமைச்சர் நடத்திய கோலப்போட்டி; அவருக்கே எதிராக திரும்பியதால் சர்ச்சை

 'மாஜி' அமைச்சர் நடத்திய கோலப்போட்டி; அவருக்கே எதிராக திரும்பியதால் சர்ச்சை


ADDED : பிப் 23, 2026 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் அறிவித்த கோலப்போட்டி, அவருக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 78-வது பிறந்த நாளையொட்டி, கோலப்போட்டியை அறிவித்தார். இதில், பதினைந்து ஆண்டுகளில் அவர் செய்த திட்டங்களை எழுதி, வீட்டு வாசலில் கோலமிடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தொகுதி முழுதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை பெரும்பாலான வீடுகளில் சராசரி கோலம் மட்டுமே போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, 'பரிசு வேண்டாம்; டி.சி., வேண்டும்' என எழுதி, மாணவி ஒருவர் வரைந்திருந்த கோலம், பரபரப்பை ஏற்படுத்தியது.

கோலமிட்ட மாணவி நிவேதா கூறுகையில், “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான மதர் தெரஸா வேளாண்மை கல்லுாரியில், 2024ல் இளநிலை வேளாண்மை முதலாம் ஆண்டு சேர்ந்தேன். ''குடும்ப சூழலால் படிப்பை பாதியில் நிறுத்தினேன். என், டி.சி., மார்க் ஷீட்டை தர மறுத்து, 4 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். அதனால், டி.சி., மார்க் ஷீட்டை திருப்பி அளியுங்கள் என, கோலப்போட்டியில் எழுதி வைத்தேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us