தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ரூ.53 லட்சத்தில் அரசு பள்ளியை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

 ரூ.53 லட்சத்தில் அரசு பள்ளியை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

 ரூ.53 லட்சத்தில் அரசு பள்ளியை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்


UPDATED : ஜூலை 20, 2026 04:24 AM

ADDED : ஜூலை 20, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 04:24 AM ADDED : ஜூலை 20, 2026 03:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: அரசு பள்ளியை, 53 லட்சம் ரூபாயில், முன்னாள் மாணவர்கள் சீரமைத்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், அப்பள்ளியை நவீன வசதிகளுடன் சீரமைக்க திட்டமிட்டனர். இதற்காக, 'முன்னாள் மாணவர்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, 'வாட்ஸாப்' குழுவை உருவாக்கினர்.

இதன் வாயிலாக, முன்னாள் மாணவர்கள் அவரவரர் சக்திக்கு தகுந்தவாறு நன்கொடை வழங்கினர். இவ்வாறு சேர்ந்த, 53 லட்சம் ரூபாய் நிதியில், பள்ளியில் கலைத்திறன் கூடம், கூட்டரங்கம் உள்ளிட்டவற்றுக்கு கட்டடங்கள் கட்டி கொடுத்ததுடன், பள்ளிக்கு தேவையான நவீன வசதிகளையும் ஏற்படுத்தினர்.

இதை, மாணவர்கள் பயன்பாட்டு வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், சி.இ.ஓ., சுவாமி முத்தழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்து, முன்னாள் மாணவர்களை பாராட்டினார். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us