/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தெரு நாய்களை விரட்டி குழந்தைகளை காத்த 'ஹீரோ'
/
தெரு நாய்களை விரட்டி குழந்தைகளை காத்த 'ஹீரோ'
ADDED : ஆக 14, 2025 12:20 AM

ரிஷிகேஷ்: சிறுவர்களை தெருநாய்கள் விரட்டி செல்வதை வீட்டின் மாடியில் இருந்து பார்த்த, 'ஜெர்மன் ஷெப்பர்டு' நாய், ஒரே பாய்ச்சலில் கீழே குதித்து தெருநாய்களை விரட்டி, குழந்தைகளை காப்பாற்றியது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் உள்ள குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், 'அடுக்கு மாடி குடியிருப்பில் வளர்க்கப்படும், 'ஜெர்மன் ஷெப்பர்டு' நாய் ஒன்று, முதல் தளத்தில், அமைதியாக அமர்ந்திருந்தது. சாலையில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த தெருநாய்கள் கூட்டம், சிறுவர்களை துரத்தி சென்று கடிக்க முயன்றது.
இதை பால்கனியில் இருந்து பார்த்த, 'ஜெர்மன் ஷெப்பர்டு' நாய், 'ஹீரோ' போல மாடியில் இருந்து எகிறி குதித்து, தெருநாய்களை விரட்டியது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுவர்கள் வெவ்வேறு திசைகளில் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.
சாகசம் செய்து சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய அந்த 'ஜெர்மன் ஷெப்பர்டு' நாய்க்கு சமூக வலைதளத்தில் பாராட்டு குவிகிறது. 'உண்மையான கதாநாயகன் போல் செயல்பட்டு குழந்தைகளை காப்பாற்றிய, 'டாகேஷ் பாய்' செயல் பாராட்டுக்குரியது' என, ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.