/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அரிய நோயால் பாதித்த சிறுமி மருத்துவ உதவிக்காக தவிப்பு
/
அரிய நோயால் பாதித்த சிறுமி மருத்துவ உதவிக்காக தவிப்பு
அரிய நோயால் பாதித்த சிறுமி மருத்துவ உதவிக்காக தவிப்பு
அரிய நோயால் பாதித்த சிறுமி மருத்துவ உதவிக்காக தவிப்பு
ADDED : டிச 14, 2025 02:34 AM

துாத்துக்குடி: அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பாற்ற, அவரது பெற்றோர் மருத்துவ உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமம், 4வது தெருவை சேர்ந்த சங்கர் -- ஜோதிலட்சுமி தம்பதியின் மகளான செண்பகவல்லி, 17, என்பவர் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
சங்கர் திருப்பூரில் பனியன் கம்பெனியிலும், ஜோதிலட்சுமி கோவில்பட்டியில் கூலி வேலையும் செய்து வருகின்றனர்.
செண்பகவல்லி பிறந்ததில் இருந்தே, அவரது உடலில் ஆங்காங்கே வீக்கம், புண் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போதிலும் செண்பகவல்லி குணமடையவில்லை. தொடர்ந்து அவர் சாப்பிட்ட மருந்துகளால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் பல்வேறு இடங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் எடுக்கப் பட்ட பரிசோதனையில், செண்பகவல்லி பாப்பா சின்ட்ரோம் என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
டில்லி யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக சமீபத்தில் செண்பகவல்லியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
ஆனால், மருத்துவ செலவுக்கான பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சங்கர், ஜோதிலட்சுமி கூறுகையில், ''பாப்பா சின்ட்ரோம் நோய் பல கோடி பேரில் ஒருவருக்குத்தான் ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
' 'டில்லி தனியார் மருத்துவமனைக்கு சென்றால், நோயின் பாதிப்பு மேலும் அதிகமாகாமல் தடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எங்கள் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்,'' என்றனர்.
இந்த மாணவிக்கு உதவ விரும்புவோர், 82482 13526 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

