/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுங்க; உழைத்து வாழ ஆசைப்படும் 72 வயது மூதாட்டி

ADDED : ஏப் 22, 2025 07:07 AM

கோவை: கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து மனுக்கொடுத்தும் எந்த பலனுமில்லாத சூழலில் விடா முயற்சியோடு, நுாறு நாள் வேலைதிட்டத்தில் ''எனக்கு வேலையை மட்டும் கொடுங்க'' உழைத்து வாழ ஆசைப்படுகிறேன் என்று சொல்லி கலெக்டரிடம் மனு கொடுத்தார், 72 வயது மூதாட்டி.
கோவை, அன்னுார் தாலுகாவுக்குட்பட்ட பட்டக்காரன்புதுாரை சேர்ந்தவர் ராமாத்தாள். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்தார். அதற்கான சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டு களாக இவருக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ராமாத்தாளுக்கு பணி வழங்கப்படுவதில்லை.
அதனால் வருவாய் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், பல ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வசம் மனுக்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து ராமாத்தாள் கூறியதாவது: எனக்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக நுாறு நாட்கள் தொடர்ந்து வேலை வழங்கினர். சம்பளமும் கிடைத்தது. ஆனால் தற்போது வேலையும் இல்லை சம்பளமும் இல்லை.
வேலை இல்லாததால் நான் அன்றாடம் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வெளி வேலைக்கு சென்றால் வயதாகிவிட்டது என்று ஒதுக்கிவிடுகின்றனர்.
அதனால் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.